சரித்திரம் படைக்கிறது சந்திராயன் 2! இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடும் நெட்டிசன்கள்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து, பிறகு பூமி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி,
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறியது. தற்போது முழுவதுமாக நிலவினை நெருங்கிவிட்டது சந்திராயன் 2. இந்த சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து, விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவினில் தரையிறக்கப்படுகிறது. பின்னர் இந்த லேண்டரில் இருந்து பிரக்யான் எனும் பெயரிடப்பட்ட சாதனம் மூலம் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடைபெற உள்ளது. இதனை இணையதளவாசிகள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர். இந்திய அளவில் #Chandrayaan2 #ISRO #IndiaOnTheMoon #VikramLander போன்ற ஹேஸ்டேக்குகள் மூலம் இந்தியாவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.