வெற்றிகரமாக பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டது சந்திரயான்-2

Default Image

சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட  குறித்த தகவல் ஒன்றை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டுள்ளது.இன்னும் சந்திராயன் 2  ஒரே ஒரு புவிவட்டப்பாதையை மட்டும் சுற்ற வேண்டியுள்ளது.இதன் பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்