அறிவியல்

Chandrayaan 3 Live Updates: லேண்டர் தரையிறங்கும் பணி 5.44க்கு தொடங்கும்.! இஸ்ரோ அறிவிப்பு

Published by
Dinasuvadu Web

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி (இன்று) நிலவில் தரையிறங்குகிறது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பல்வேறு கட்டங்களுக்கு பிறகு, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் செய்யும் முதல் நாடு என்ற பெருமையும் நிலவுக்கு சென்ற 4வது நாடு என்ற பெருமையும் இந்தியா பெறும்.

லேண்டர் தரையிறங்கும் நேரலை:

ஆகஸ்ட் 23, 2023 இன்று  மாலை 18:04 மணி (6.04 மணிக்கு) அளவில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இன்று  மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப்- https://youtube.com/watch?v=DLA_64yz8Ss, இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் பணி இன்று மாலை 5.44க்கு தொடங்கும் எனவும், இஸ்ரோ தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்கத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி,  தானியங்கி தரையிறங்கும் பணி (ALS) தொடங்க அனைத்தும் தயாராக உள்ளன. இன்று மாலை 5.44 மணிக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் லேண்டர் மாட்யூலின் (LM) தரையிறங்கும்.

தானியங்கி கட்டளையைப் பெற்றவுடன், லேண்டர் மாட்யூலின் ஆனது த்ரோட்டில் செய்யக்கூடிய என்ஜின்களை இயக்குகிறது. மிஷன் ஆபரேஷன்ஸ் குழு கட்டளைகளின் வரிசையான செயல்பாட்டை உறுதிசெய்து கொண்டே இருக்கும். என்று கூறியுள்ளது.

தினச்சுவடுவின் இந்த பக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் பற்றிய தகவல்கள் நேரலை செய்தி வடிவமாக உடனுக்குடன் பதிவிடப்படும்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

4 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

6 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

7 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

7 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

7 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

8 hours ago