ஜூலை 14ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3..! இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Chandrayaan3

சந்திராயன்-3 ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

எல்விம்3 – எம்4 (LVM3-M4) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது.

சந்திராயன்-3 விண்கலம் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்குதல், உலாவுதல், லேண்டர் – ரோவர் கட்டமைப்பை கொண்டுள்ளது சந்திராயன்-3 விண்கலம். நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திராயன்-3 விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலம் LVM MK 3 ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ராக்கெட் அடுக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி ஜூலை 12 முதல் 19க்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்