Chandrayaan-3: இன்னும் சில மணி நேரத்தில்..,அந்த 15 நிமிடம் தருணம்!

Published by
கெளதம்

சந்திரயான் – 3 விண்கலம் நிலவை அடைவதற்கு நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் பொழுது, பல முக்கியமான தருணங்கள் இருக்கும். அதில், தரையிறங்குவதற்கான இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் அந்த 15 நிமிடம் தான் மிகவும் பதைபதைக்கும் தருணமாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம்,  இன்று நிலவில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இந்நிலையில், சந்திரயான் – 3 இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ சுற்றுப்பாதையில், நிலவை சுற்றி வருகிறது. தரையிறங்க முயற்சிக்கும்போது, லேண்டரானது 25 கிமீ உயரத்தில் இருந்து கீழே செல்ல தொடங்கும். தரையிறங்கும்பொழுது, கடைசி 15 நிமிடம் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சந்திரயான்-2 லேண்டர் தோல்வியடைந்தது இந்த இடத்தில் தான். எனவே, சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்களை செய்திருக்கிறது இஸ்ரோ.

இனிய மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்கவுள்ள நிலையில், 5.44க்கு நிலவில் தரையிறங்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தரையிறங்குவதற்கான முன்பான பணிகள் தான் அந்த பதட்டமான 15 நிமிடமாக பார்க்கப்டுகிறது.

முதல்கட்டம்

தற்போது, 25 கி.மீ குறைந்த சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் லேண்டர், மாலை 5.30 மணி அளவில் நிலவின் தென் பகுதியில் குறைந்த வட்ட பாதையில் சுற்றி வரும். அப்போது அதன் உந்துவிசை கலன்கள் இயக்கப்பட்டு கிடைமட்டமாக சென்ற லேண்டர் பகுதி, நேர் கீழாக பயணிக்க தொடங்குகிறது.

அதாவது, 7.5 கீ.மீ உயரத்திற்கு லேண்டரை குறைப்பது தான் முதல் முதல் கட்டம். அப்போது, லேண்டர் மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் வரும் நிலையில், அது மணிக்கு 1200 கி.மீ வேகமாக குறையும். இந்த மொத்த நிகழும் நிகழ்வதற்கு 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. கடைசி 15 நிமிடங்களில் முதல் கட்டம் மட்டுமே 10 நிமிடங்கள் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டம்

7.4 கி.மீ உயரத்தில் இருந்து 6.8 கி.மீ உயரத்திற்கு குறைப்பது தான் இரண்டாம் கட்டம். இந்த கட்டத்தின் போது, லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவது போன்று அதன் கால்கள் கீழ்நோக்கி இறக்கப்படுகிறது. அப்போது, அதன் கோலம் 50 டிகிரி சாய்வாக மாற்றப்படும். எங்கு இறங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்டம் இது.

மூன்றாம்  கட்டம் 

மூன்றாம் கட்டத்தில் 6.4 கி.மீ உயரத்தில் இருந்து 800 மீ உயரம் குறைக்கப்படும், 50 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாக இறங்கும் வகையில் அதன் கோணம் மாற்றப்படும்.

நான்காம் கட்டம் 

800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு குறைப்பது தான் நான்காம் கட்டமாகும். 22 நொடிகள் அந்தரத்தில் நிற்க வைக்கப்படுகிறது. இந்த கட்டத்தில் லேண்டரின் உள்ள அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டு, உந்து விசை கொடுக்கப்பட்டு வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இந்த நேரத்தில் தான் லேண்டரில் உள்ள நான்கு கால்களும், மொத்த தொழில்நுட்பமும் செயல்பட்டு சமதள பக்கத்தை கண்டறிய வேலை செய்யத் தொடங்கும்.

ஐந்தாம் கட்டம்

இந்த கட்டத்தில் எந்த இடத்தில் இறங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டு. லேண்டரானது, 150 மீட்டர் உயரத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் தரை இறங்குகிறது.

ஆறாம் கட்டம்

ஆறாம் கட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் லேண்டரின் வேகத்தை குறைத்து கட்டுப்படுத்தி மெதுவாக தரையை நோக்கி வரவைப்பது தான் இதன் பணி. இதில் லேசர் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு லேண்டரின் உயரம் கணக்கிடப்பட்டு நிதானமாக தரை இறக்கப்படும்.

ஏழாவது கட்டம் 

இந்த கட்டத்தில் 10 மீட்டர் உயரத்தில் லேண்டரின் என்ஜின்கள் அனைத்தும் அணைக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கும். நொடிக்கு 2 மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கி தரை இறங்கப்படுகிறது.

எட்டாம் கட்டம்

இப்பொது, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வரும். இந்த ரோவர் கருவி லேண்டரில் இருந்து சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கும். இது தான் எட்டாவது கட்டமாக பார்க்கப்படுகிறது.

எல்லாம் சரியாக நடந்தால், இந்தியா வரலாறு படைப்பது உறுதி. இதனால் தான் இந்த கடைசி 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ரோவர் கருவி நிலவில் தரையிறங்கியதும், விக்ரம் லேண்டர் ரோவரின் படங்களையும், பிரக்யான் ரோவர் லேண்டரின் படங்களையும் எடுத்து அனுப்புகிறது.

லேண்டர் நிலவில் தரையிறங்கு நேரலை:

இதனிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

2 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

3 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

3 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

4 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

4 hours ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

5 hours ago