இந்தியா

Chandrayaan-3: இதை 3டி கண்ணாடில பாருங்க..! இஸ்ரோ வெளியிட்ட லேண்டரின் அனாக்லிஃப்..!

Published by
செந்தில்குமார்

இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளை சுற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி, இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்தது.

பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் திட்டமிட்டபடி லேண்டர் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளது.

செப்டம்பர் 22-ஆம் தேதி சூரிய வெளிச்சம் கிடைத்ததும் ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.  விக்ரம் லேண்டரை ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதற்கு முன் நிலவின் மேற்பரப்பில் மீண்டும் மேல் எழுப்பி இஸ்ரோ சோதித்தது. மேலும், லேண்டர் நிலவின் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்து விட்டது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரக்யான் ரோவரால் எடுக்கப்பட்ட, நிலவில் இருக்கும் விக்ரம் லண்டரின் 3டி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட அந்த பதிவில், “அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாணங்களில் பொருள் அல்லது நிலப்பரப்பின் எளிய காட்சிப்படுத்தல் ஆகும்.”

“பிரக்யான் ரோவரில் எடுக்கப்பட்ட இடது மற்றும் வலது படம் இரண்டையும் உள்ளடக்கிய நவ் கேம் ஸ்டீரியோ இமேஜஸைப் பயன்படுத்தி இங்கு வழங்கப்பட்ட அனாக்லிஃப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 3-சேனல் படத்தில், இடது படம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வலது படம் நீலம் மற்றும் பச்சை சேனல்களில் வைக்கப்படுகிறது (சியான் உருவாக்குகிறது).

“இந்த இரண்டு படங்களுக்கிடையேயான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது, இது மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. இந்த புகைப்படத்தை 3டியில் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

4 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

6 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

6 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

7 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

7 hours ago