நேற்று 25அரை மணிநேர கவுன்டவுன் துவங்கிய நிலையில் இன்று பிற்பகல் 2.30க்கு விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3 விண்கலம்.
நிலவின் தென்துருவத்தை சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து நாளை இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட நேற்று 25 அரை மணிநேர கவுன்டவுன் துவங்கியது.
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் நிகழ்வு இந்தியாவை உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் இந்தியா ஒரு பெருமை மிகு தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்கலத்தை ஏந்தி செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது.
இன்று விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன் -3 விண்கலம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திராயன் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…