கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம். –3-எம்-4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையைப் படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக, சந்திரயான்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனையடுத்து சந்திரயான்-3 ஆகஸ்ட் 5இல் சுற்றுவட்டப் பாதையில் நுழைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் இன்று இரவு 7 மணிக்கு நிலவு சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. இதனை சந்திரயான்-3 திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் சந்திரயான்-3 பதிவிட்டது போல் இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.
அந்த ட்வீட்டில் “வணக்கம், நான் சந்திரயான்-3. ஒரு சிறப்பு அப்டேட்டுடன் வந்துள்ளேன். இதுவரை எனக்கு இது ஒரு அற்புதமான பயணம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இன்று இரவு 7 மணிக்கு சந்திர சுற்றுப்பாதையில் நுழையப் போகிறேன். நான் எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிய, காத்திருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…