சந்திரயான் 3 : லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர்… குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து.! 

Chandrayaan 3 - President Droupadi Murmu

நேற்று இந்தியாவின் பெருமைமிகு தருணமான சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டதற்கு நம் நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குழுமமான இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு பின்னர், லேண்டரில் இருந்து பிரக்யான்-ரோவர் வெற்றிகரமாக வெளியேறி நிலவில் தடம் பதித்தது. இந்த நிகழ்வுக்கும் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரோவர் தரையிறங்கியதற்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது  X சமூக வளைத்ததில்  , ‘ விக்ரம்-லேண்டரின் உள்ளே இருந்து பிரக்யான்-ரோவரை வெற்றிகரமாக அனுப்பியதற்காக இஸ்ரோ குழு மற்றும் அனைத்து சக குடிமக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். விக்ரம் தரையிறங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, சந்திரயான் 3 இன் மற்றொரு கட்டத்தின் வெற்றியைக் குறித்தது. பிரக்யான் சந்திரனைப் பற்றிய நமது புரிதலைப் பெற்று வளப்படுத்தும் தகவல் மற்றும் பகுப்பாய்வுகளை எனது சக குடிமக்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இணைந்து உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன். என பதிவிட்டுள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்