சந்திரயான்-3 திட்டம்: விண்கலத்தின் ஒலியல் சோதனை வெற்றி!
சந்திரயான்-3 விண்கலத்தின் முக்கியமான விண்கல ஒலியியல், அதிர்வு சோதனைகள் வெற்றிகரமாக முடிவு.
சந்திரயான்-3 விண்கலத்தின் ஒலியியல், அதிர்வு சோதனைகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3 தொடர்பான அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை ஜூன் இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில் விண்கல ஒலியல், அதிர்வு சோதனைகள் வெற்றி பெற்றுள்ளது.