சந்திராயன்-3 விண்கலம் இரண்டாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி; இஸ்ரோ.!

Chandrayan-3 orbit2

சந்திராயன்-3 விண்கலம் 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன்-3 விண்கலத்தை இரண்டாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தததாக இஸ்ரோ விண்வெளி மையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கி, சந்திராயன்-3 விண்கலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை அதாவது 179 கிமீ தொலைவில் உயர்த்தப்பட்டதாக நேற்று முன்தினம் இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், இன்று இரண்டாவது சுற்றுப்பாதைக்கு 226 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் மேலும் உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும் அடுத்தகட்ட உயர்த்தும் பணி நாளை பிற்பகல் 2-3 மணிக்குள் நடைபெறும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்