சந்திரயான் 3: தரையிறங்கும் பணி 5.44க்கு தொடங்கும் – இஸ்ரோ அறிவிப்பு!

chandrayaan 3

சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் பணி இன்று மாலை 5.44க்கு தொடங்கும் எனவும், இஸ்ரோ தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்கத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி,  தானியங்கி தரையிறங்கும் பணி (ALS) தொடங்க அனைத்தும் தயாராக உள்ளன. இன்று மாலை 5.44 மணிக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் லேண்டர் மாட்யூலின் (LM) தரையிறங்கும்.

தானியங்கி கட்டளையைப் பெற்றவுடன், லேண்டர் மாட்யூலின் ஆனது த்ரோட்டில் செய்யக்கூடிய என்ஜின்களை இயக்குகிறது. மிஷன் ஆபரேஷன்ஸ் குழு கட்டளைகளின் வரிசையான செயல்பாட்டை உறுதிசெய்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. இன்று மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்