சந்திராயன்-3 தரையிறக்கம்.. இரவு வெகுநேரம் கழித்து தான் எனது வீட்டிற்கு திரும்பினேன்.! இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி.!

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சந்திராயன்-3 தரையிறங்கிய நாள் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
அவர் கூறுகையில், இறுதியாக எங்கள் பிரார்த்தனை நிறைவேறியது. சந்திராயன்-3 தரையிறங்கிய உடன் நாங்கள் வீடு திரும்பி வரவில்லை. விக்ரம் லேண்டரிலிருந்து ரோவர் வெளியே வரும் வரை நாங்கள் இன்னும் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்திருந்தோம். ரோவர் லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவின் மேற்பரப்பிற்கு மேல் நகர்ந்ததைப் பார்த்த பிறகுதான், இரவு வெகுநேரம் கழித்து எனது வீட்டிற்குத் திரும்பினேனன் என இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கிய நாள் குறித்து சிலாகித்து பேசினார்.