சந்திரயான் 3 – விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ..!
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
சுற்றுப்பாதை குறைப்பு:
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இறுதிகட்ட சுற்றுவட்டப்பாதை:
அதன்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும் அதன் பின்னர் விக்ரம் லேண்டர் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிரிந்தது ‘விக்ரம்’ லேண்டர்:
சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், உந்துவிசைக் கலனும் லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
முதல் டீபூஸ்டிங்:
உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையின் முதல் டீபூஸ்டிங் முறையில் சற்று குறைக்கப்பட்து லேண்டர் பகுதியின் சுற்றுப்பாதை நிலவுக்கு நெருக்கமாக 113 கிமீ x 157 கிமீ தொலைவில் கொண்டு வரப்பட்டது.
இறுதி டீபூஸ்டிங்:
இந்நிலையில் “இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
புதிய புகைப்படங்கள் வெளியீடு
விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தற்போது லேண்டர் தரையிறங்கும் போது பாறாங்கற்கள் அல்லது ஆழமான அகழிகள் இல்லாமல் அதரையிறங்குவதர்க்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறக்கம்
ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 18:04 மணி (6 மணி) அளவில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வு நேரலையாக, இஸ்ரோ இணையதளம் https://isro.gov.in , இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் youtube.com , பேஸ்புக் facebook.com மற்றும் டிடி நேஷனல் டிவியில் ஆகஸ்ட் 23ம் தேதி 17:27 மணி (5.27 மணி) முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Chandrayaan-3 Mission:
Here are the images of
Lunar far side area
captured by the
Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC).This camera that assists in locating a safe landing area — without boulders or deep trenches — during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB
— ISRO (@isro) August 21, 2023