நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சந்திராயன் 3.! வெளியான அதிகாரபூர்வ தகவல்.!

Chandrayan 3

கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி  தனது சுற்றுப்பாதை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து இஸ்ரோ முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்து உள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனை அடுத்து சந்திராயன்-3 ஆகஸ்ட் 5, 2023இல் சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்