நிலவில் சந்திரயான்-3 இங்கதான் இறங்கப்போகிறது..! இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ..!
சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, ‘விக்ரம்’ லேண்டர் தனியாக நேற்று தனியாக பிரிந்த நிலையில் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்குவதற்கான இடத்தை வீடியோ வாக சந்திராயன்-3 பதிவு செய்து அனுப்பியுள்ளது.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
சுற்றுப்பாதை குறைப்பு:
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இறுதிகட்ட சுற்றுவட்டப்பாதை:
அதன்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும்.
பிரிந்தது ‘விக்ரம்’ லேண்டர்:
சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உந்துவிசைக் கலனும் லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரித்த பிறகு சந்திரயான் லேண்டர் எடுத்த புகைப்படக் காணொளியை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் ஆனது ஆகஸ்ட் 15 மற்றும் 17ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. இதில் நிலவின் இருண்ட பகுதியில் இருக்கும் பள்ளங்கள் தெளிவாகத் தெரிகிறது.
Chandrayaan-3 Mission:
???? as captured by the
Lander Position Detection Camera (LPDC)
on August 15, 2023#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/nGgayU1QUS— ISRO (@isro) August 18, 2023
Chandrayaan-3 Mission:
View from the Lander Imager (LI) Camera-1
on August 17, 2023
just after the separation of the Lander Module from the Propulsion Module #Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/abPIyEn1Ad— ISRO (@isro) August 18, 2023