இந்தியா

சந்திரயான்-3 மகத்தான வெற்றி..! இஸ்ரோ தலைவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்..!

Published by
செந்தில்குமார்

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்தது.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் பிறகு லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து  ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது.

இந்நிலையில், சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், “நேற்று மாலை இஸ்ரோவின் மகத்தான சாதனையால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. இது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் மிகுந்த பெருமையும், உற்சாகமும் அளிக்கும் விஷயமாகும்.”

“இஸ்ரோவின் சிறப்பான திறன்கள் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க தலைவர்களைக் கொண்டுள்ளது மற்றும் கூட்டு முயற்சியின் ஆவி எப்போதும் அதை இயக்குகிறது. அறுபதுகளின் முற்பகுதியில் இருந்து தன்னம்பிக்கையின் மீது தொகுத்துக்கொண்டது அதன் பெரும் வெற்றிகளுக்கு பங்களித்தது.”

“ஒட்டு மொத்த இஸ்ரோ சகோதரத்துவத்திற்கும் எனது வாழ்த்துகள் மற்றும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் அதன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Congress
Published by
செந்தில்குமார்

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

8 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

8 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

9 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

10 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

11 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

12 hours ago