தயார் நிலையில் சந்திராயன்-3; எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு.!

Chandrayan-3Fuel

இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திராயன்-3 விண்கலம் தாங்கி செல்லும் ராக்கெட்டிற்கு எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு.

நிலவின் தென்துருவத்திற்கு இந்தியாவின் சார்பில் இன்று விண்ணில் சந்திராயன்-3 விண்கலம் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு செலுத்தப்படும் நிலையில், நேற்று இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்-3, நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துசெல்லும் LVM-3 ராக்கெட்டிற்கான திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட சோதனையும் நிறைவுற்றதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

திட எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், க்ரையோஜீனிக் அடுக்கிற்கான எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்