#Chandrayaan-3 : இறுதிகட்ட சுற்றுப்பாதையை சென்றடைந்த சந்திராயன்-3.! நாளை மிக முக்கிய நிகழ்வு…
சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் மூன்று முறை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், நான்காம் கட்ட, இறுதி கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
சுற்றுப்பாதை குறைப்பு:
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இறுதிகட்ட சுற்றுவட்டப்பாதை :
அதன்படி, இன்று இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். சந்திராயன்-3இன் ப்ராபல்ஷன் பகுதி மற்றும் லேண்டர் பகுதி ஆகியவை தனித்தனி பயணங்களுக்கு தயாராகி வருவதற்கான நேரம் இது.
நாளைய நிகழ்வு…
ப்ராபல்ஷன் பகுதியில் இருந்து லேண்டர் பகுதியானது நாளை (ஆகஸ்ட் 17, 2023) அன்று பிரிக்கப்படும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended.
With this, the lunar bound maneuvres are completed.
It’s time for preparations as the Propulsion Module and the Lander Module… pic.twitter.com/0Iwi8GrgVR
— ISRO (@isro) August 16, 2023