சந்திராயன்-3 : அற்புதமான தருணம்.. இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி.!

Chandrayaan 3 - Sundar Pichai

கடந்த ஜூலை 14ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலமானது, நேற்று சரியாக மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. தற்போது, இந்திய நாட்டு மக்கள் அனைவரும் இந்த வரலாற்று சாதனையை கொண்டாடி வருகின்றனர்.  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நம் நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூகுள் தலைமை அல்பபெட் CEO சுந்தர் பிச்சை இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இது ஒரு அற்புதமான தருணம்.. வாழ்த்துக்கள் இஸ்ரோ.
இன்று (நேற்று) நிலவில் சந்திராயன்3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்று (நேற்று) நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என தனது வாழ்த்துக்களை X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்