#Breaking சந்திராயன் 2 : இணைப்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் கண்டுபிடிப்பு!
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டிருந்தது. இதில் பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு சந்திராயன் 2 சென்றது. பின்னர் அதில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து நேற்று அதிகாலை விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவில் தரையிறக்க பட்டது.
தரையிறக்கும் போது, நிலவின் தரைபகுதியை நெருங்குகையில் லேண்டர் உடனான தொடர்பு எதிர்ப்பாராத விதமாக துண்டிக்கப்பட்டது. பின்னர் லேண்டரை கண்டறிய இஸ்ரோ கடுமையாக போராடியது.
தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு பலனளிக்கும் வகையில், லேண்டர் இருப்பிடமானது, நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது லேண்டரில் இருந்து தகவல் கிடைக்க ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.