நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டாலில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டி துண்டிக்கப்பட்டது
பின்னர், ஆர்பிட்டர் பகுதி நிலவை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்தது. மேலும், விரைவில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் உடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் இருக்குமிடம் அறியப்பட்டது என தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறுகையில், ‘விக்ரம்லேண்டர் முழுமையாக சேதமடையவில்லை..லேண்டர் முழுமையாக உள்ளது எனவும், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை பற்றிய தகவல் வெளியானது எனவும், விரைவில் இது குறித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விக்ரம் லேண்டரை கண்டறிந்து அதன் மூலம் சிக்னல் பெற, நிலவை அதன் தரைப்பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரை 50 கிமீஆக தொலைவில் சுற்ற வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…