சந்திராயன்-2 வெற்றிகரமாக மூன்றாவது நிலையை எட்டியது – இஸ்ரோ..!
கடந்த ஜூலை 27-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.
#ISRO
Third Lunar bound orbit maneuver for Chandrayaan-2 spacecraft was performed successfully today (August 28, 2019) at 0904 hrs IST.For details please visit https://t.co/EZPlOSLap8 pic.twitter.com/x1DYGPPszw
— ISRO (@isro) August 28, 2019
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நிலவை சுற்றி வருகிறது. இந்நிலையில் நான்கு கட்டம் உள்ள நிலையில் மூன்றாவது கட்டத்தை சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக எட்டியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என கூறியுள்ளது.