சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து, விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் தரையிரக்கப்பட்டது. ஆனால் லேண்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி செல்லும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டர் சிக்னல் கிடைக்காமல் போனது. பின்னர், விக்ரம் லெண்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேடும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து கொண்டது. ஆனால் இறுதிவரை லேண்டர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சந்திராயன்-2 திட்டம் 98% வெற்றி அடைந்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். இதற்கு சில மூத்த ஆராய்ச்சியாளர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அவர்கள் குறிப்பிடும்போது சுய பரிசோதனை செய்யாமல் இவ்வாறு கருத்து தெரிவித்தால், மற்ற நாடுகள் மத்தியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நகைப்புக்குரியதாக மாறிவிடும். என கூறினர்.
இதற்கு பதில் அளித்த இஸ்ரோ தலைவர் சிவன், ‘ சந்திராயன்-2 ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு குழு இதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆராய்ந்து வந்துள்ளது. அந்த குழு தான் சந்திராயன்-2 98% வெற்றி அடைந்துள்ளது என கருத்து தெரிவித்திருந்தது. அந்த கருத்தை நான் தெரிவித்தேன் என கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் இஸ்ரோ தலைவர் சிவன்.
மேலும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சூரியனுக்கு ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை அனுப்ப உள்ளோம் எனவும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…