கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் “டெல்லி மெட்ரோ ரயிலிளுக்குள் பயணிகள் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு பெண் ஒருவர் மஞ்சள் நிற புடவை அணிந்து கொண்டு சந்திரமுகி போல வேடம் அணிந்துகொண்டு அங்கிருந்த பயணிகளை பயமுறுத்தினார்.
இதனால் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சற்று பயந்தனர். பிறகு , சந்திரமுகி வேடமிட்டிருந்த அந்த பெண் இளைஞர் ஒருவரை மிரட்டி எழுப்பி அவருடைய இடத்தில அமர்ந்தார். பிறகு ரயிலின் கதவுகள் மீண்டும் திறந்தது அதிலிருந்து நெட்ஃபிக்ஸ் தொடரான ‘மணி ஹீஸ்ட்’ மற்றும் கே-டிராமா ‘ஸ்க்விட் கேம்’ ஆகியவற்றின் கதாபாத்திரங்களாக உடையணிந்த இரண்டு ஆண்கள் உள்ளே நுழைந்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் எதற்காக இப்படி செய்துள்ளார்கள் என குழம்பி வந்தனர். இதனையடுத்து, நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (என்எம்ஆர்சி) இந்த வீடியோக்கள் மெட்ரோ வளாகத்தில் தனது அனுமதியுடன் படமாக்கப்பட்ட வணிக விளம்பரத்தின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியது.
டெல்லியை தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக் கேஜெட் பிராண்டான (BoAt) நிர்வாணா நிறுவனம் தங்களுடைய (headphones) ஹெட்ஃபோன்கள் விளம்பரம் செய்வதற்காக Netflix ஆகியவற்றின் ஒத்துழைப்பைக் கொண்டு இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களுக்கு வீடியோவை பார்க்கையிலே இது ப்ரோமோஷன் என்பது தெரிந்துவிட்டது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…