உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக நீதிபதி சந்திரசூட்டை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட்டை குடியரசுத் தலைவர் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தற்போதைய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் 65 வயதை அடைந்தவுடன் பதவியில் இருந்து விலகிய ஒரு நாளுக்குப் பிறகு, நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவின் 50 வது தலைமை நீதிபதியாக நீதிபதி சந்திரசூட் பொறுப்பேற்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான தனஞ்சய ஒய் சந்திரசூட்டின் பெயரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார்.
நீதிபதி சந்திரசூட், பிப்ரவரி 22, 1978 முதல் ஜூலை 11, 1985 வரை நீதித்துறையின் தலைவராக இருந்த இந்தியாவின் மிக நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்வி சந்திரசூட்டின் மகன் ஆவார்.
அவர் 1998 இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார் மற்றும் 2000 மார்ச் 29 முதல் 2013 இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வரை பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். மேலும் 2016ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
அவரது குறிப்பிடத்தக்க சில முக்கியமான தீர்ப்புகளில், அயோத்தி நிலப்பிரச்சனை, ஆதார் சட்டம், சட்டப்பிரிவு 377, சபரிமலை கோவில் வழக்கு, பீமா கோரேகான் கைதுகள், தனியுரிமை உரிமை, பாலின நீதி.சமீபத்திய தீர்ப்பில் திருமணமாகாத பெண்களும் கர்ப்பத்தை கலைக்கக் கோருவதற்கு தகுதியுடையவர்கள் என்ற தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…