ஆந்திர முதலமைச்சராக வரும் 9ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு?
ஆந்திர சட்டமன்ற தேர்தல் : இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது. பெரும்பான்மைக்கு 88 இடங்கள் தேவைப்படும் நிலையில், 133 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூன் 9-ம் தேதி ஆந்திர பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு 4 வது முறையாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடந்தால், சந்திரபாபு தனது வாழ்க்கையில் 4 வது முறையாக ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இதன் மூலம், அவர் ஆந்திராவில் அதிக காலம் பதவி வகித்த முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார். ஏன்னென்றால், இதுவரை யாரும் 4 முறை அங்கு முதல்வராக இருந்ததில்லை என்று சொல்லப்படுகிறது.