Categories: இந்தியா

4-வது முறையாக ஆந்திரா முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

Published by
கெளதம்

புதுடெல்லி : ஆந்திராவின் 18ஆவது முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், 11.27 மணக்கு அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில், “சந்திரபாபு நாயுடு எனும் நான்” என்று அவர் பிரமாண உறுதி மொழியை சொன்னபோது, ‘ஜெய் சந்திரபாபு நாயுடு, ஜெய் சந்திரபாபு அண்ணகாரு’ என அவரது ஆதரவாளர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.

முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனசேனாவுக்கு மூன்று அமைச்சரவை பதவிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்படுகின்றன.

தற்பொழுது, ஆந்திராவின் 18ஆவது முதல்வராக பொறுப்பேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வாழ்த்தினார்.  இந்த விழாவில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களும், NDA கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

8 minutes ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

11 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

16 hours ago