மெகா கூட்டணி அமைகிறதா……ராகுல்-சந்திரபாபு நாயுடு கூட்டணி..!! காலத்தின் கட்டாயம் சூளுரை…….பாஜகவை படாய் படுத்தும் ச.பாபு…!!
பாஜக கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கும் சந்தரபாபுநாயுடு மெகா கூட்டணியை அமைக்க நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒன்றினைத்து வருகிறார் இது ஒரு புறம் பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசிற்கும் கட்சிக்கும், கட்சிகளை ஒன்று சேர்த்து வருகிறார்.குறிப்பிட்டு சொன்னால் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் பாஜகவிடம் இருந்து காப்பாற்றுவதற்காகச் செயல்பட உள்ளோம் என்று பகீரங்கமாக ஆந்திர சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இவருடைய இந்த நகர்வு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் முதல்வரும்,தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் பயணத்தை தொடர்ந்து சந்தித்துவருகிறார். இந்நிலையில் அதன் முன்னோடியாக இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரிலே சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அவருடைய கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்கள் ஜெயதேவ் மற்றும் ரமேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.இதன் பின் சந்திப்பு குறித்து இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில் காங்.தலைவர் ராகுல் காந்தி நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களுடைய சந்திப்பின் நோக்கம். நாங்கள் இருவரும கடந்த கசப்புகளை மறந்துவிட்டு தற்போது உள்ள நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி சிந்தித்துச் செயல்பட தயாராக உள்ளோம் நாங்கள்.
மேலும் பேசிய அவர் நாட்டின் நலன் ஒன்று மட்டுமே எங்களின் ஒருமித்த ஒரே குறிக்கோள் என்று ராகுல் திட்டவட்டமாக தெரிவித்தார்.ராகுல் காந்தியை தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு நாட்டை பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட காத்துஇருக்கிறோம்.
இது தொடர்பாகவே இன்று ராகுல் அவர்களை சந்தித்து அவரிடம் ஆலோசனை நடத்தினேன். எங்களின் கூட்டணி மற்றும் இணைவது ஜனநாயகத்தின் கட்டாயமாக உள்ளது. மத்திய பா.ஜ.க வுக்கு எதிரான கட்சிகளை இணைத்து பொதுவான ஒரு தளத்தை உருவாக்க நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். எங்களின் முக்கிய நோக்கமமே பா.ஜ.க-வை வீழ்த்துவதே என்று அவேசமாக தெரிவித்தார்.
DINASUVADU