பாஜகவுடன் தான் கூட்டணி.. சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்.!

சந்திரபாபு நாயுடு: மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அனைவரது பார்வைகளும் மற்ற மாநில கட்சிகள் பக்கம் திரும்பியுள்ளது. இதில் குறிப்பாக , சந்திரபாபு நாயுடு (தெலுங் தேசம்) மற்றும் நிதிஷ் குமார் (JDU) ஆகியோரின் ஆதரவு பாஜவுக்கா அல்லது மாற்று கூட்டணிக்காக என்ற கேள்வி எழுந்தது.
இந்தசூழலில், இன்று ஆந்திர பிரதேசம் அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் 16 இடங்களை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலனுக்கான எந்த தியாகத்தையும் செய்ய தயாராகி உள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் YRS காங்கிரஸ் ஆட்சி ஆந்திர வளர்ச்சியை 30 ஆண்டுகாலம் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். பல நெருக்கடிகளில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றி உள்ளனர்.
இன்று டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பயணிப்பதில் உறுதியாக உள்ளேன். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025