சந்திராயன் 2 வில் இருந்த ரோவர் நிலவில் நகர்ந்துகொண்டு இருக்கிறது.! சென்னை தொழில்நுட்ப வல்லுநர் தகவல்.!

Default Image

ரோவர் பிரஜயன் நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்துகொண்டு தொடர்ந்து விக்ரம் லேண்டருக்கு தகவல் அனுப்பி வருவதாகவும், ஆனால், விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தொழில்நுட்ப வல்லுநர் சண்முக சுப்பிரமணியம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி சில நிமிடங்களில் விஞ்ஞானிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, நிலவின் மேற்பரப்பில் கிழே விழுந்து சேதமானது.

இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறக்கப்பட்ட ரோவர் பிரக்யன் நிலவில் இருப்பதாகவும், அது விக்ரம் லேண்டருக்கு தொடர்ந்து தகவலை அனுப்பி கொண்டிருக்கலாம் எனவும், சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சண்முக சுப்பிரமணியம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரோவர் பிரக்யன் நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்துகொண்டிருப்பதாகவும், அது நாசா நவம்பர் 11இல் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்படவில்லை எனவும், ரோவர் பிரக்யன் தொடர்ந்து விக்ரம் லேண்டருக்கு தகவல் அனுப்பி வருவதாகவும், ஆனால், விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தகவல் பெற முடியவில்லை எனவும் தொழில்நுட்ப வல்லுநர் சண்முக சுப்பிரமணியம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்