உ.பி.யில் சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.!

Train Accident

உத்தரபிரதேசம் : கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற பகுதியில்   சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் இன்று தடம் புரண்டன. இதனைத்தொடர்ந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும், 25 பேர் காயமடைந்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பல ஏசி பெட்டிகள் மோசமான நிலையில் உள்ளதால் குறைந்தது 12 பெட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்