கவர்னரிடம் ராஜினா கடிதம் அளித்தார் சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனால், ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149 சட்டசபை தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஒரு செய்தி வந்துள்ளது.
அதன்படி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அம்மாநில கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.இதனை கவர்னர் ஏற்று கொண்டுள்ள நிலையில் ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30 பதவி ஏற்கிறார்.