தூக்கு தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு ? நிர்பயா குற்றவாளி வழக்கு இன்று விசாரணை

Default Image

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். 

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதுஇந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதன் பின்னர் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.இறுதியாக குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார்.குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மீது  இன்று  (மார்ச் 2-ஆம் தேதி )விசாரணை நடத்துகிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு 4 பெருக்கும் மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகம் தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்