எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024இல் வெற்றி பெற வாய்ப்பு; சுப்ரமணிய சுவாமி கருத்து.!
பிரதமர் மோடிக்கு வெளிநாடு செல்ல நேரமிருக்கிறது, மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை என சுப்ரமணிய சுவாமி கருத்து.
நாட்டில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி, நேரில் சென்று வன்முறை சம்பவத்தை தடுத்து நிறுத்தும் வழியை செய்ய வேண்டும், பிரதமருக்கு இம்பாலுக்கு நேரில் செல்ல நேரம் கிடைக்கவில்லை என பாஜக மூத்த நிர்வாகி சுப்ரமணிய சுவாமி, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக மூத்த நிர்வாகியான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடு செல்ல நேரம் உள்ளது. ஆனால் மணிப்பூருக்கு செல்ல நேரம் இல்லை, இதனை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறினார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் 2024 தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
பிரதமர் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை, அவர் ஏதாவது செய்தார் என்று கூறுபவர்கள் எல்லாம் ஜால்ரா அடிக்கிறார்கள் என்று தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, நாட்டில் நமது கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்களும், முஸ்லீம்களும் கெடுத்துவிட்டு சென்றுள்ளனர், இதனால் இந்துக்களின் மத்தியில் மறுமலர்ச்சி வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் வாக்குகள் நமக்கு(பாஜகவுக்கு) கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.