அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இது தற்பொழுது புயலாக மாறவுள்ளதாகவும், புயலாக மாறினால் “நிசர்கா” என பெயரிடப்படவுள்ளது.
தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இது, வடகிழக்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், “நிசர்கா” என வங்கதேசம் பெயரிடப்படவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, மகாராஷ்டிரா நோக்கி செல்லும். கேரளாவில் பருவமழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.