#HeavyRain: கர்நாடகாவில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளன.
மத்திய வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
அதிலும், கர்நாடகாவின் பெங்களுரூ, கலபுரகி, விஜயபுரா நகரங்களில் பலத்த மழை பெய்ததால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்தும் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது வரும் 27ஆம் தேதி வரை கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடாகாவின் குடுகு, கோலார், சிக்கபள்ளபுரா, ராம்நகரம், சித்ரதுர்கா, சாம் ராஜ்நகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.