10 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
கடந்த சில நாட்களாகவே பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சமீபத்தில் பல இடங்களில் வெள்ளமும் ஏற்ப்பட்டது. இந்த நிலையில்,10 மாநிலங்களில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 9 வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்னிந்தியாவில் மழையின் அளவு குறைய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.