Categories: இந்தியா

வாக்கெடுப்பில் வெற்றி.! தப்பித்தார் ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன்.!

Published by
மணிகண்டன்

ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்த பின்னர், புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் , மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சோரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்கண்ட் மாநில நம்பிக்கை வாக்கெடுப்பு.! சட்டசபை வந்தடைந்தார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.!  

ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத்துறையின் விசாரணை காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் சோரணை காவல்துறையினர் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு வந்தனர்.

இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக தொடர்வார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முதல்வர் சம்பாய் சோரனின் உரையை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு பெரும்பான்மை நிரூபிக்க 41 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது.  இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 17 மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என மொத்தம் 47 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.  பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.

இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் சம்பாய் சோரன் 47 உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக தொடர உள்ளார் சம்பாய் சோரன். அவருக்கு எதிராக 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

Recent Posts

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

12 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

59 minutes ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

1 hour ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

1 hour ago

உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!

மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…

2 hours ago