#அருணச்சல்-பிரதேசத்தில் படைகள் குவிப்பு..நரி வேளை ஆரம்பம்!

Published by
kavitha

லடாக்கில் கால் பதிக்க நினைத்த சீனாவை மடக்கி சரியான பாடம் புகட்டிய இந்திய ராணுவத்தின் அதிரடி செயல்களை கண்டு வாய் மட்டுமின்றி அனைத்தையும் அடைத்து கொண்டு உள்ளது சீனா ,லடாக்கில் சீனாவின் மூக்குடைபட்டும் திருந்த வில்லை.

இந்தியாவிற்கு குடைச்சல்களை எவ்வாறு எல்லாம் கொடுக்கலாம் என்றே திட்டம் தீட்டி வருகிறது.ஒரு புறம் பாகிஸ்தானை தூண்டி விடுகிறது.மறுபுறம் நட்பு நாடாக இருந்துவந்த நேபாளத்தை அண்மை காலமாக மன கசப்பு ஏற்படுத்தும் படியான செயல்களில் ஈடுபடுத்து வருகிறது.

இவ்வாறு குடைச்சல்களை கொடுத்தாலும் அதற்கு சிறிதும் அசராமல் இந்திய ராணுவம் தக்க பதிலடியை எல்லையில் கொடுத்து வருகிறது.

லடாக்கில் இனி வாலை ஆட்ட முடியாது என்று  தன் கூள்ள நரி யோசனையை அருணாச்சல பிரதேசத்தில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது.

அருணாச்சலில் சீனா தனது படைகளை குவித்து வருவதது மட்டுமின்றி இந்திய ராணுவத்தை சீண்டுவதற்கவே  சீன அதிபர் ஷீ ஜிங்பிங்  ஒருசதித் திட்டத்தை  தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நரி வேஷம் போடும் சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்திய ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இன்னும்  இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள், வெளியுறவு அமைச்சர்கள், ராணுவ அமைச்சர்கள் பேச்சு நடத்தியதையை தொடர்ந்து நடத்தி வரும் நிலையிலும் இந்த, பிரச்னைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே ஏற்பட்டது.

ஆனால் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து, சீன ராணுவம் உடனடியாக படைகளை வாபஸ் பெறும்படி, இந்தியா தரப்பில் வலியுறுத்தப் பட்டது. ஆனாலும், லடாக் பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபட்டு தான் வருகின்றனர். அவர்களின் சதித் திட்டத்தை, நம் வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில், சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தகுக்க பதிலடியை அதிபலமாக  கொடுப்பதால், சீனா, தன் வியூகத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

சீன அதிபர் ஜிங்பிங் லடாக் விவகாரத்தில் கடும் விரக்தி அடைந்துள்ளதாகவும்.இதனால் தன் வியூகத்தை மாற்றியுள்ள ஜிங்பிங்  வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், எல்லை பகுதியில் சீன ராணுவத்தை களம் இறக்கி வருகிறார்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச எல்லையில், அசபிலா, லோங்ஜு, பிசா, மாஜா உள்ளிட்ட ஆறு இடங்களில் சீன ராணுவத்தினர் அதிக அளவில் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள், இந்திய எல்லையில் உள்ள  ராணுவ வீரர்களை சீண்டும் நோக்கத்துடனும், அத்துமீறும் நோக்கத்துடனும் முகாமிட்டு தங்கியுள்ளனர்.

அருணச்சல் எல்லையை ஒட்டியுள்ள பிசா பகுதியில், புதிய சாலை அமைக்கின்றம் பணியிலும் சீன வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சீன ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்.மேலும்  எல்லையில் கண்காணிப்பை அதிதீவிரப் படுத்தியுள்ளதுடன், கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை, தங்களுக்கு சொந்தமான இடங்கள் என்று லடாக்கின் கல்வான் போல் சீனா உரிமை கொண்டாடி அவ்வபோது தங்கள் நாட்டு வரைபடத்துடன் அருணச்சல் பிரதேசத்தையும் இணைத்து வெளியிடும் இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் ஆனால் தற்போது அதிகளவு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தரப்பிலிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்கின்றனர்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை ஏற்கனவே பழுதடைந்து வரும் சூழலில் மேலும் மோசமாக்கும் வகையில், சீன வீரர்கள் எல்லையில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் இந்திய அதிகாரிகள், அமைச்சர்களுடன் லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க அமைதி பேச்சு நடத்தும் சீனா, மறுபுறம் அருணச்சல் எல்லையில் படைகளை குவித்து வருவது, அந் நாட்டு அதிபரின் நரித்தனத்தை அல்லவா?வெளிப்படுத்துகிறது என்று மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
kavitha

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

4 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

5 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

5 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

6 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

7 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

8 hours ago