இரவோடு இரவாக 59 சீன ஆப்களுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் அரசு தடைவிதிக்க உள்ளது என்ற ஒரு தகவல் பரவி வந்தது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கையாக சீனாவின் அனைத்து விதமான ஆப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவல் :இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கின்ற வகையில்சீன ஆப்களுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் பரிந்துரைத்தாக தகவல் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக பலகட்ட ஆலோசனைகளை நடந்திய மத்திய அரசு சீனாவின் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து நேற்று இரவு உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன்படி, ‘டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ மற்றும் ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்’ போன்ற சீனாவின் 59 செயலிகளுக்கும் இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…