வருவாயை அதிகரிக்க பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீது கேரள அரசு செஸ் வரி விதிப்பு.
இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசாங்கத்தின் இரண்டாவது முழு பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான செஸ் வரியை உயர்த்தி கேரள நிதியமைச்சர் கேஎன் பாலகோபால் அறிவித்தார்.
அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் சமூக பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக பாதுகாப்பு விதை நிதிக்கு ரூ.750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தனது பட்ஜெட் உரையில் பாலகோபால் கூறினார்.
இதுபோன்று, ரூ.500-999 விலையுள்ள இந்தியத் தயாரிப்பான வெளிநாட்டு மதுபானத்தின் (ஐ.எம்.எஃப்.எல்) ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.20 செஸ் விதிக்கப்படும். மேலும் ரூ.1,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையுள்ள ஐ.எம்.எஃப்.எல் பாட்டில்களுக்கு ரூ.40 செஸ் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMFL மீதான சமூக பாதுகாப்பு செஸ் மூலம் ரூ.400 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் எரிபொருள் மற்றும் மதுபானங்கள் மீது செஸ் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில நிதியமைச்சர் கூறுகையில், இந்த நிதியாண்டில் மாநிலத்திற்கு நிதி நெருக்கடிகள் இருந்தாலும், அது கடனில் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அதிக கடன் வாங்க முடியாத நிலையில் மாநிலம் உள்ளது. மத்திய அரசு தனது பழைய நிலைப்பாட்டை தொடர்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு கேரளா அதிக கடன் வாங்க வேண்டும். நெருக்கடியை சமாளித்து கேரளா இதுவரை வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். எனவே, மத்திய அரசின் வருவாய் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்க கேரள அரசு செஸ் வரி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…