இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி..! விலை எவ்வளவு தெரியுமா..?
சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி செர்வாவாக், இந்தமாதம் சந்தைகளில் கிடைக்கும்
இந்தியாவில் செயல்பட்டு வரும், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி செர்வாவாக், இந்தமாதம் சந்தைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ்கள் கொண்ட குப்பிக்கு ரூ. 2,000-க்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை ஜனவரி 24-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) CEO ஆதார் பூனவல்லா மற்றும் அதன் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.
சிங் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார், தனியார் சந்தையில் HPV தடுப்பூசியின் விலை இரண்டு டோஸ் குப்பிகளுக்கு ₹ 2,000 ஆகும், இது மற்ற HPV தடுப்பூசிகளை விட மிகக் குறைவு. மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் சங்கங்கள் நிறுவனம் தனது HPV தடுப்பூசியை நாடிய நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் இந்த மாதம் முதல் CERVAVAC ஐ தனியார் சந்தையில் வெளியிடத் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.