நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி – மத்திய அரசு
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அடுத்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer vaccine) தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய அளவிலான நோய்த்தடுப்பு இயக்கம், முதற்கட்டமாக 9 முதல் 14 வயது வரையிலான பெண்களுக்கான பள்ளிகளில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5-10 வகுப்புகளில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடத் தொடங்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அடுத்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதனிடையே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் Human papillomavirus-க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், தற்போது அதன் உற்பத்தி இந்தியாவிலேயே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம்தான் இந்தத் தடுப்பூசியையும் தயாரிக்கிறது. இந்த நிலையில், நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கப்படும் என கூறப்படுகிறது.