#Breaking:குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு ‘Z ‘ பிரிவு பாதுகாப்பு!
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு,மத்திய அரசு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.
இதனை முன்னிட்டு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.அதே சமயம்,குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே,ஆயுதம் ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மூலம் முர்முவுக்கு 24 மணிநேரமும் Z வகைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே,கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக,திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து யஷ்வந்த் சின்கா ராஜினாமா செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.அதன்படி, ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎப் (CRPF) காவலர்கள் யஷ்வந் சின்கா அவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Centre provides ‘Z’ category armed security cover of Central Reserve Police Force to opposition’s presidential candidate Yashwant Sinha: Sources
(file pic) pic.twitter.com/BPKcOjII3G
— ANI (@ANI) June 24, 2022
ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா வெளியுறவுத்துறை, நிதி அமைச்சராக இருந்தவர்.கடந்த 2018-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த அவர், துணைத்தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.