மாணவர்களுக்கான வழிகாட்டுதல் குறித்து விவாதித்த மத்திய பல்கலைக்கழகங்கள்.
மத்திய பல்கலைக்கழகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர்களின் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவாதங்களை குழுவாக கலந்துரையாடியுள்ளனர். படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள், வித்தியாசமான சேட்டை பண்ணும் மாணவர்கள், மனநிலையில் மாற்றம் உள்ள மாணவர்கள் என மாணவர்களை வேறுபடுத்தி பிரித்துள்ளனர். ஜாமியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா ஹம்டார்ட் ஆகிய பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் ஜாமியா துணைவேந்தரின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கை குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் அமைதி காக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் உடையது, அதை தற்பொழுது காவல்துறையினரும் கையாண்டு வருகின்றனர். காவல்துறையினரின் பங்கு அதிகமாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தலைமை விருந்தினர் அக்தர் கூறியுள்ளார். மேலும் மாணவர்களை மனிதநேயத்துடன் எவ்வாறு கையாளுவது என்பது காவலர்களுக்கு தெரியும் எனவே இனி மாணவர்களால் பிரச்சினை எதுவும் இல்லை என நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொண்டCAA எதிர்ப்புப் போராட்டங்களின் போது ஜாமியா மாணவர்கள் இரண்டு முறை போலீஸ் நடவடிக்கை எதிர் கொண்டதாகவும், டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற அணிவகுப்பின் போது போலீசார் லத்தி அடிமற்றும் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் 25 மாணவர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒழுக்கம் இல்லாமல் பல்கலைக்கழகம் முன்னேற முடியாது, எனவே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் பயத்தை விட அன்பையும் மரியாதையும் அதிகப்படுத்த வேண்டும் என இறுதியாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…