#BREAKING: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் அறிவிப்பு வெளியாகிறது.
இந்நிலையில், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வருகின்ற ஜூலை 5-ம் தேதியன்று நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.