மத்திய படை வீரர்கள் இனி கண்டிப்பாக 2 வருடம் பேரிடர் மீட்புப்படையில் பணியாற்றியே ஆக வேண்டும்!
சென்னை பெருவெள்ளம், கேரள வெள்ளம், ஒரிசா வெள்ளம் போன்ற நாட்டில் பேரிடர் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பேரிடர் மீட்பு படையில் குறைவான வீரர்களே உள்ளதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழுவானது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட மத்திய அரசானது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ சி.ஆர்.பி.ஏஃப், ரேபிட் ஃபோர்ஸ், எல்லை பாதுகாப்பு படையினர்,அதிவிரைவு படை போன்ற பிரிவுகளை சேர்ந்த மத்தியப்படை வீரர்கள் இனி கண்டிப்பாக குறைந்தது 2 வருடம் தேசிய பேரிடர் மீட்பு படையில் பணியாற்ற வேண்டும் என அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.