நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் – சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!

Default Image

நாளை முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக சென்ட்ரல் ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு புறநகர் ரயில் சேவைகளில் கூட்டம் அதிகரிப்பதைக் குறைக்க அக்டோபர் -1 அதாவது நாளை முதல் இரண்டு பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 கூடுதல் ரயில் சேவைகளை இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கல்யாண் நிலையங்களுக்கு இடையே இரண்டு பெண்கள் சிறப்பு ரயில் உட்பட நான்கு புதிய சிறப்பு ரயில்கள் பிரதான பாதையில் இயங்கும் மேலும்,  மீதமுள்ள நான்கு சிறப்பு ரயில்கள் தானே-வாஷி டிரான்ஸ்-ஹார்பர் பாதையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மும்பையில் 923 புறநகர் சேவைகளை இயக்கி வருகிறது, இதில் மேற்கு ரயில் பாதையில் 500 உள்ளன. நாளை முதல் கூடுதல் எட்டு ரயில்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 931 ஆக அதிகரிக்கும்.

இதற்கிடையில், கொரோனாதொற்றுநோயால், மத்திய ரயில்வே தற்போது அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கும் மட்டுமே ரயில்களை இயக்குகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்