மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா,கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் குருபிரசாத் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், சிகிச்சை பலனின்றி குருபிரசாத் உயிரிழந்தார்.
இதனையடுத்து,டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா அவர்களின் மறைவிற்கு மத்திய ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பிற மத்திய அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் இருந்து 1986 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வான குருபிரசாத் அவர்கள் பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…